அயோத்தியில் ராமர் கோயில்: பிரதமருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

புதன், 13 ஜனவரி 2016 (09:37 IST)
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏதுவாக, அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இத குறித்து சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
அந்த வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்த வலியுறுத்துமாறு சட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும். 
 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வெளியாகும் பட்சத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படும். 
 
அத்துடன், இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக இசுலாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
 
முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்