பாடப் புத்தகத்தில் மகான்கள் வரிசையில் பாலியல் சாமியார் அசராம் பாபு

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (13:22 IST)
ராஜஸ்தான் மாநில மூன்றாம் வகுப்பு புத்தகத்தில், மகான்கள் வரிசையில் பாலியல் சாமியார் அசராம் பாபு பெயரும் இடம்பெற்றுள்ளது.
 

 
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில மூன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தில் மகான்கள் பற்றிய அத்தியாயத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசராம் பாபு பெயரும் இடம் பெற்றுள்ளது.
 
அன்னை தெரசா, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் வரிசையில் பாலியல் சாமியார் அசராம் பாபு மற்றும் ராம்தேவ் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனகல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், பல்வேறு புகார்களில் சிக்கியவரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருமான யோககுரு ராம்தேவும் மகான்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். பாடப் புத்தகத்தின் இந்த அத்தியாயத்தில் குருநானக் கபீர்தாசர் மீராபாய் ஆகியோர் வரிசையில் சங்கராச்சாரியார் பெயரும் இடம் பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்