அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

Siva

வெள்ளி, 5 ஜூலை 2024 (15:19 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதில் டெல்லி மன்றத்தின் செயல்பாடுகளுக்கு ஆட்சேபனம் தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
 ஜாமினை நிறுத்தி வைத்த நீதிபதி சுதீர் குமார் ஜெயின் என்பவரின் சகோதரர் அமலாக்கத்துறை வழக்கறிஞராக ஆஜரானதாகவும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவு முழுமையாக கிடைக்கும் முன்பே நீதிபதி சுதிர் ஜாமினுக்கு தடை விதித்திருப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
 
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்