வாக்குப்பதிவின்போது மாயமான தேர்தல் அதிகாரி சடலமாக மீட்பு

வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (16:46 IST)
அருணாசலப் பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, காணாமல் போன தேர்தல் அலுவலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 9 ஆம்  தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரான மேத்தியூ டபி என்பவர் காணாமல் போனார்.
 
மேத்தியூ டபி பணியமர்த்தப்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோதே அவர் காணாமல் போயுள்ளார். ஆனால், இது தொடர்பாக அவருடன் பணியமர்த்தப்பட்ட பிற அலுவலர்கள்  உடனடியாக தெரிவிக்காததால் தேடுதல் வேலை மிக தாமதமாக துவங்கியதாக தெரிகிறது. 
 
ஏப்ரல் மாதம் 9 தாம் தேதி மாயமான மேத்தியூ டபியை கண்டுபிடிக்க 15 ஆம் தேதி தான் மாநில காவல்துறையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள சின்னி கிராமத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
 
மேத்தியூ டபியின் மனைவி, தனது கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளதால், தனியாக மருத்துவர்கள் குழுவை அமைத்து பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்