ரகுராம் ராஜன் மீதான குற்றச்சாட்டை அங்கீகரிக்கவில்லை : அருண்ஜெட்லி

வியாழன், 26 மே 2016 (17:46 IST)
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீதான குற்றசாட்டுகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.


 

 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி ரகுராம் ராஜன் மீது கடுமையாக சில குற்றச்சாட்டுகளை சமீபத்தில் வைத்தார். ரகுராம் ராஜன் மனதளவில் முழு இந்தியராக இல்லை எனவும், அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
 
அந்த கடிதத்தில் ரகுராம் ராஜனை மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி அந்த பதவியில் வைக்க கூடாது எனவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட அவரை உடணடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார் சுப்பிரமணியன் சாமி.
 
இதனையடுத்து ரகுராம் ராஜனுக்கு இணையத்தில் ஆதரவு அலை பெருகியுள்ளது. அவரே மீண்டும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வர வேண்டும் என பலர் கருத்து சொல்லி வருகின்றனர்.
 
இந்நிலையில், ரகுராம் ராஜன் மீதான குற்றச்சாட்டுகளை தான் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்