சிறுநீரக கோளாறு: அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி?

வியாழன், 5 ஏப்ரல் 2018 (16:00 IST)
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளார்.  இதனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்துள்ளனர். அப்போது அவருக்கு சிறுநீரக கோளாறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் அவர் தனது அரசு பணிகளை விட்டில் இருந்தபடியே கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக இந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இவருக்கு ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு இரப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது கூறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்