ஏடிஎம்களில் பணமில்லை: என்ன சொல்கிறார் அருண் ஜெட்லி?

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (13:27 IST)
கடந்த திங்களன்று, கிழக்கு மஹாராஷ்டிரா, பிஹார் மற்றும் குஜராத் பகுதிகளில் ஏடிஎம்களில் பணமில்லாமல் போனது. இதனால், மக்கள் பலர் பணமின்றி தவித்தனர். இதற்கான காரணம் என்னவென அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து நிதி அமைச்சகத்தின் தரப்பில் கூறியதாவது, வழக்கத்துக்கு மாறான பணத்தேவை கடந்த மூன்று மாதங்களாக காணப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிஹார் பகுதிகளில் பணத்தேவை முன்பில்லாத அளவில் அதிகரித்துள்ளது. 
தேவையான அளவு பணப்புழக்கம் குறித்து கவனம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உட்பட அனைத்து வங்கிகளையும் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏடிஎம்களில் பணத்தை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பணத்தட்டுப்பாடு மற்றும் ஏடிஎம் சேவை முடக்கம் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்