அப்துல் கலாம் வசித்த வீடு குழந்தைகள் அருங்காட்சியகமாக மாற்றப்படும்: வெங்கைய்யா நாயுடு

சனி, 1 ஆகஸ்ட் 2015 (00:36 IST)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லியில் வசித்த வீடு, குழந்தைகளுக்கான அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
 

 
ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது:-
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் விஷன் 2020 மூலம் இளைஞர்கள், மாணவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளர். இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல கலாம் வழிகாட்டுவார் என்ற தாக்கம் இளைஞர்கள், மாணவர்களிடம் ஏற்பட்டதால் இந்த அளவுக்கு மாபெரும் கூட்டம் திரண்டது. அதனால் தான், இன்று 5 லட்சம் பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
 
அப்துல் கலாம் டெல்லியில் வசித்த வீட்டை குழந்தைகளுக்கான அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்று அவரது உறவினர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிச்சயமாக ஏற்கும். எனவே,  இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்