ஹைதராபாத்தில் மவுலிவாக்கம் நிகழ்வு: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (11:01 IST)
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் எல்கைக்குட்டபட்ட நானக்கரம்கூடா என்ற இடத்தில் பல அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.


 
 
7 அடுக்குமாடி கொண்ட அந்தக் கட்டிடப்பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இரவு பணி முடிந்து அங்கு பணியாட்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. 
 
அதில் அங்கு வேலை செய்துவிட்டு ஓய்வு எடுத்த பணியாட்களின் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளனர். மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. 
 
இதில் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
இதில் மாயமாகிவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 
 
மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, கலால் வரித்துறை அமைச்சர் பத்மா ராவ், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்