பிரபல நடிகை மீது தேசத்துரோக வழக்கு

புதன், 26 செப்டம்பர் 2018 (17:43 IST)
பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா மீது உத்திரப் பிரதேசத்தில் உள்ள மோதிநகரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



நடிகை திவ்யா தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமடந்தவர். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸின் இளைஞர் பிரிவில் சேர்ந்து 2013-ல் நடந்த மாண்டியா தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார்.தற்போது காங்கிரஸின் சமூக வலைதளப் பிரிவில் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது டிவிட்டரில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். மோடியின் சிலை அருகே நின்று மோடியே அந்த சிலையில் திருடன் என்று எழுதுவது போன்ற புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பாக உத்திர பிரதேசத்தை சேர்ந்த சையத் ரிஸ்வான் என்ற வழக்கறிஞர் மோதிநகர் காவல்நிலையத்தில் திவ்யாவின் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாபோது ‘அந்த பதிவை நீக்க திவ்யாவை வலியுறுத்தினேன். அவர் நீக்காத காரணத்தால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்’.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்