துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மீது விஸ்வ இந்து பரிஷித் விமர்சனம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (17:32 IST)
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் முஸ்லிம் உடன்பாட்டு நடவடிக்கை அரசியல் மற்றும் இனவாத அறிக்கை எனவும் இது அவர் வகிக்கும் பதிவிக்கு கண்ணியம் மற்றும் பொருத்தமானதல்ல என விஸ்வ இந்து பரிஷித் விமர்சித்துள்ளது.

இது அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களை இருண்ட சந்துக்குள் தள்ளுவதாகும். இதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்துத்துவா அமைப்பு கூறியது. மிகவும் மதிப்புமிக்க துணை ஜனாதிபதி நற்கலியில் அமர்ந்திருப்பவர் இந்த இனவாத அறிக்கையை வெளியிட்டதால் விஸ்வ இந்து பரிஷித் கண்டனம் தெரிவிக்கிறது. இது ஒரு அரசியல் அறிக்கையாகும். இது துணை ஜனாதிபதி அலுவலகத்திற்கு பொருத்தமானதல்ல என விஸ்வ இந்து பரிஷத்தின் சுரேந்திர ஜெயின் கூறினார்.

இந்திய முஸ்லிம்கள் மற்ற நாடுகளைவிட அதிகமான அரசியலமைப்பு உரிமைகளை அனுபவிக்கின்றனர் எனவும் அன்சாரி தனது துரதிர்ஷ்டவசமான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயின் தெரிவித்தார்.

நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்க்க வலுவான களம் அமைக்கும் வகையில் பேசிய அன்சாரி அனைவருக்கும் வளர்ச்சி என்ற அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து தழுவிக் கொண்டது தான் உடன்பட்டு நடவடிக்கை என புது டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார். முஸ்லிம்களை விலக்கல் மற்றும் பாகுபாடோடு பார்ப்பது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் நாம் தவறுவிட்டோம் என கூறிய அன்சாரி மாநில அரசு இதை சரி செய்து கொள்ள வேண்டும் அதற்கான முன்னேற்றங்களை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்