சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே 17 வரை நடைபெறும் என்றும், மாநில வாரியாகத் தேர்தல் நடைபெறும் தேதிகளும் அடங்கிய அட்டவணை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அனைவரும் அந்த அட்டவணை அதிகாரப்பூர்வமானது என்று நம்பி பகிர ஆரம்பித்தனர். ஆனால் அந்த அட்டவணை உண்மை இல்லை என்று சில மணிநேரங்களில் தேர்தல் ஆணையத்தின் தகவல் வெளியானது. மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் இந்த போலியான தகவலைப் பரப்பி குழப்பததை ஏற்படுத்தியவர் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்ற் கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று ஏஎன்ஐ ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெறலாம் என்றும் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.