கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிசினஸ் டுடே என்ற இதழின் அட்டைப்படத்தில் தோனியை கடவுள் விஷ்ணு போல் சித்தரித்து ஒரு படம் வெளியாகியிருந்தது. அதற்கு ‘காட் ஆப் பிக் டீல்ஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். அந்த படம் அப்போது பலத்த சர்ச்சைக்குள்ளானது. மேலும், தோனிக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோனி போன்ற பிரபலங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் நடந்து கொள்ளக்கூடாது. மேலும், அதன் பின்விளைவை பற்றி உணர வேண்டும் என்று கண்டித்தது.