70 தான் என்று சொன்ன எதிர்க்கட்சிகள்.. 270 என்று கூறும் அமித்ஷா.. எது உண்மை?

Mahendran
புதன், 15 மே 2024 (10:35 IST)
இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவுக்கு இந்த நான்கு கட்ட தேர்தலில் 70 தொகுதிகளில் தான் வெற்றி கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இந்த நான்கு கட்ட தேர்தலில் மட்டும் 270 தொகுதிகள் கிடைக்கும் என்று பாஜக கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த முறை பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் அதிகபட்சமாக 200 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் பாஜக பிரமுகர்கள் 400 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்றும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கார்கே உள்பட ஒரு சில இந்திய கூட்டணி தலைவர்கள் இதுவரை நடந்த தேர்தலில் இருந்து 70 தொகுதிகளில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார். 
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த அமித்ஷா இதுவரை நடந்த தேர்தலில் 270 தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் 70 என்றும், பாஜக 270 என்றும் கூறி இருப்பதை அடுத்து ஜூன் நான்காம் தேதி பாஜகவுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்