பா.ஜ.க. வுக்குள் உட்கட்சி பூசல் – பிரதமராக ஆசைப்படும் கட்கரி ?

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (08:26 IST)
பாஜக வின் உயர்மட்டத் தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருப்பதாகவும் கட்சியின் தலைமையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக விமர்சித்து வருவதற்கு அதுவேக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்ததில் இருந்து அக்கட்சிக்குள் நிரைய உட்கட்சிப் பூசல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாஜக வுக்குள்ளேயே மோடியின் மீது நம்பிக்கைக் குறைந்து விட்டதாகவும் அடுத்த தேர்தலில் மோடிக்குப் பதில் வேறொருவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மோடிக்கு பதிலாக நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமெனக் குரல்கள் எழுந்ததையடுத்து நிதின் கட்கரி பாஜக தலைவர் அமித் ஷாவையும் கட்சியின் கொள்கையையும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தபோதே இந்த தோல்விக்குக் கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய நிதின் கட்கரி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர் ‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். என்னுடைய கட்சியில் எனக்குக் கீழிருக்கும் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் சரியாக செயல்படவில்லை என்றால் அதற்கு நான்தானே பொறுப்பேற்க வேண்டும்,’ என சூசகமாக அமித்ஷாவைக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனால் பாஜகவில் அமித்ஷாவுக்கும் நிதின் கட்கரிக்கும் இடையில் அறிவிக்கப்படாத பனிப்போர் மூண்டுள்ளதாகப் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்