பாஜக தேசிய தலைவராக மீண்டும் அமித் ஷா?

வியாழன், 7 ஜனவரி 2016 (23:28 IST)
பாஜக தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
 

 
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பதவி காலம், ஜனவரபி 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் பாஜகவில் தீவிரம் அடைந்துள்ளன.
 
இன்னும் ஒரு சில மாதங்களில், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது, சரியாக இருக்காது என, பிரதமர் மோடி கருதுவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், அமித் ஷாவே, மீண்டும் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையே ஆர்.எஸ்.எஸ். மேலிடமும் விரும்புகிறதாம். எனவே, பாஜக தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்