கட்டாய மத மாற்றத்திற்கு பாஜக என்றுமே எதிரானது - அமித்ஷா

சனி, 20 டிசம்பர் 2014 (16:54 IST)
கட்டாய மத மாற்றத்திற்கு பாஜக என்றுமே எதிரானது என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். 
  
கேரள மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்தவும், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இதற்காக நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்த அமித்ஷா," கட்டாய மதமாற்றம் என்பதை பாஜக ஆதரித்தது இல்லை. மதச் சார்பற்ற கட்சிகள் என்று கூறிக் கொள்பவர்கள் பாஜகவை இந்த நேரத்தில் ஆதரிக்க வேண்டும். மதச்சார்பின்மை பற்றி பேசும் சில அரசியல் கட்சிகள் உண்மையில் அக்கொள்கையில் தீவிரமாக இருந்தால், மதமாற்ற தடுப்புச் சட்டத்தை இயற்ற பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார். 
 
மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்ற வேண்டும் என்றும் பாஜகவினரை அவர் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்