அமெரிக்க மாணவி கற்பழிப்பு: சினிமா இயக்குனர் குற்றவாளி என தீர்ப்பு

ஞாயிறு, 31 ஜூலை 2016 (14:46 IST)
டெல்லியில் ஆய்வுத்துறை அமெரிக்க மாணவி கற்பழிக்க விவகாரத்தில் சினிமா துறையில் இருக்கும் இணை இயக்குனர் குற்றவாளி என டெல்லி செசன்சு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 

 
தெற்கு டெல்லியை சேர்ந்தவர் முகமது பரூக்கி என்பவர் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறையில் பயின்று வரும் 30 வயதான மாணவி ஒருவர், தனது ஆய்வு தொடர்பாக உதவுமாறு இவரை அணுகியுள்ளார்.
 
இதற்காக கடந்த மார்ச் 28–ந் தேதி இவரது வீட்டுக்கு சென்ற அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இயக்குனரை கைது செய்தனர்.
 
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி இயக்குனர் குற்றவாளி என அறிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்