இ-பரிவர்த்தனை மூலம் பார்க்கிங் கட்டணம்

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (21:48 IST)
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலைய பார்க்கிங் கட்டணங்கள் இனி இ-பரிவர்த்தனை மூலம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறித்தது. அதைத்தொடர்ந்து பணம் தட்டுபாடு காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பணம் இல்லா கட்டண முறையை கடைப்பிடிக்க மத்திய அரசு, மக்களிடம் கூறி வருகிறது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க இயலாத காரணத்தினால் சுங்க சாவடி மற்றும் விமான நிலையங்களின் பார்க்கிங் கட்டணங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
விமான நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதிக்கு கட்டணம் வசூலொக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது நாளை 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 29-ந்தேதியில் இருந்து இ-பரிவர்த்தனை மூலம் பார்க்கிங் பணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்டண பணத்தை டெபிட்/கிரெடிட் கார்டுகள், பேடிஎம், ப்ரீ ரீசார்ச் மற்றும் பல்வேறு வகையான டிஜிட்டல் பணமாற்றம் மூலம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்