மேலும் அவர் கூறியதாவது, நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது தவறு. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது.
தற்போது அதிமுக-வில் காணப்படும் குழப்பமான நிலைக்கு மத்திய அரசோ, பா.ஜனதாவோ காரணம் அல்ல. எந்த மாநிலத்தின் உள் விவகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. அங்கு மிக மோசமான நிலை ஏற்படாதவரை மத்திய அரசு தலையிடாது எனவும் தெரிவித்தார்.