டெல்லியை சேர்ந்த அலோக் சாகர் (64) என்ற முதியவர், டெல்லி ஐ.ஐ.டி.,யில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர்.
அவர், 32 ஆண்டுகளாக, மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள பேடுல் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்று, பழங்குடியினர்களின் நலனுக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர், இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு வளர்த்தவர்.
இவரின் தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார், இயற்பியல் ஆசிரியர். அவருடைய சகோதரர் டெல்லி ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணி செய்கிறார். இவர், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.