வகுப்புவாத பிரிவினை ஏற்படுத்தினால் நடவடிக்கை - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை !

சனி, 4 ஏப்ரல் 2020 (18:57 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, மும்பையில் 28 பேருக்கும், தானேவில் 15 பேருக்கு புதியாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மஹராஷ்டிராவில் கொரோனா தொற்றைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்று, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேஸ்புக் மூலம் மக்களிடம் பேசினார். அதில்,  சமூக ஊடகங்களில் கொரோனா பற்றிய தவறான செய்திகள் வெளியாகிரது என மக்களை எச்சரித்தார்.

சமூக வலைதளங்களில் இதுபோல் தவறான வீடியோக்களை பரப்பி, வகுப்புவாத மற்றும் பிரிவினைகளை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்