முக்கியமாக, ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவரே, அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உடன் பிறந்த சகோதரர்கள், வீட்டில் தங்கும் உறவினர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள்தான் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதிலும் செல்போன்கள வந்த பிறகுதான், இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, உறங்கும் பெண்ணை அவர்கள் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து விடுகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீண்டுவது, ஆபாசமாக பேசுவது, சில சமயம் பாலியல் பலாத்காரம் கூட நிகழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதை தடுக்கும் வகையில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், தேவையான அறிவுரைகள் கூற வேண்டும், தூங்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிய சொல்லி வற்புறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உறங்கும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், மும்பை முதலிடத்திலும், பெங்களூர் 2ம் நடத்திலும், சென்னை 3ம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.