பீஹார் சட்டசபை கலைக்கப்பட்டபோது அப்துல் கலாம் பதவி விலக விரும்பினார் - உதவியாளர் தகவல்

திங்கள், 30 நவம்பர் 2015 (15:31 IST)
2005ல் பீகாரில் ஆட் சியைக் கலைக்க ஜனாதிபதி என்ற முறையில் கையெழுத்திட்டபோதே அப்துல் கலாம் பதவி விலக விரும்பினார் என அப்போது அவருடைய உதவியாளராக இருந்த எஸ்.எம்.கான் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
இது குறித்து புவனேஸ்வரத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் எஸ்.எம்.கான் மாணவர்களிடையே உரையாற்றும் போது கூறுகையில், ”ஆட்சிக்கலைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட டாக்டர் அப்துல் கலாம் முதலில் தயங்கினார்.
 
பின்னர் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இரண்டாம் தடவை ஆட்சிக் கலைப்பை பீகார் ஆளுநரின் பரிந்துரையுடன் அனுப்பியது .
 
அப்போது மாஸ்கோவிற்கு சென்றிருந்த கலாம் அங்கு வேறுவழியின்றி அதில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த முடிவு அவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கவே அவர் பதவியிலிருந்தே விலக விரும்பினார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்