இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி , உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்துக்களின் புனிதத்தை பாஜக அரசு சிதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி, இத்தகைய மது விருந்துகளுக்கு வாரணாசி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, வாரணாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இதேபோல் கங்கை நதியில் இப்தார் விருந்து மற்றும் அசைவ உணவு உண்டதாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மது விருந்து வீடியோ மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.