ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான், தனது வீட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்குள் செல்லும் வரையிலான நடவடிக்கைகளை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சுமார் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், அவரின் நேரடி வர்ணனையுடன் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடந்து, அவரது வாகனம் நாடாளுமன்றத்தில் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதன்மூலம், நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டார் எனக் கூறி, பாஜக, அகாலி தளம் உட்பட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பக்வந்த் மான், நேரடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து மன்னிப்பு கோரினார். இருப்பினும், அவரை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.