வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் சின்ன வீட்டில் இருந்து பெரிய வீட்டிற்கு மாறிய ராம்நாத் கோவிந்த்

வெள்ளி, 23 ஜூன் 2017 (05:05 IST)
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இதுவரை தனது குடும்பத்தினர்களுடன் பீகார் மாநில கவர்னர் மாளிகையில் குடியிருந்த நிலையில் தற்போது எம்பிக்களுக்கான பங்களாவுக்கு மாறி குடியேறியுள்ளார்.



 


ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் செய்த முதல் வேலை பீகார் மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததுதான். இன்னும் ஒருசில தினங்களில் அவர் குடியரசு மாளிகையில் தங்கவிருக்கும் நிலையில், ராஜினாமா செய்தவுடன் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறினார்

தற்போது அவர் குடும்பத்தினர்களுடன் எம்பிக்கள் தங்கும் விடுதியில் தங்கியிருப்பதாகவும், கவர்னர் மாளிகையை விட இந்த வீடு பெரியதாக இருப்பதால் தன்னை சந்திக்க வருபவர்களை வரவேற்று தங்க வைக்க வசதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவின் இரு அணிகள், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்