அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கார் விற்பனை ஷோரூமில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மா நிலம் குவாகதி என்ற பகுதியில் இயங்கி வரும் பென்லி& இசுசு கார் விற்பனை மையத்தில் இன்று காலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இசுசு கார்களும், சுமார் 6-7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்லி பைக்குகளும் எரிந்து நாசமானதாக அந்த ஷோரூம் விற்பனை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கார் ஷோரூம் இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில், இந்த ஷோரூம் நிர்வாகி ரூ.2-5 கோடிக்கு இன்சூரன்ச் கிளெயிம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.