சிங்கங்களின் பிடியிலிருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்

திங்கள், 23 ஜூலை 2018 (12:12 IST)
குஜராத்தில் எஜமானரை நாய் ஒன்று சிங்கத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் செல்லப்பிராணியாகவும், அரணாய் இருந்து அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஜீவன்களில் நாய் முக்கிய பங்கை வகிக்கிறது. 
 
நாய் தனது எஜமானர்களுக்கு விசுவாசமான ஜீவன் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
 
குஜராத் மாநிலம் அம்பர்டி கிராமத்தை சேர்ந்த பாவ்ஷ் ஹமீர் பர்வாத்  என்பவர் காட்டுப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 சிங்கங்கள், பாவ்ஷின் ஆடுகளை தாக்க ஆரம்பித்தன.
 
இதனால் அதிர்ந்துபோன பாவ்ஷ், சிங்கத்தோடு சண்டையிட்டு தனது ஆடுகளை காப்பாற்ற முற்பட்டார். இருந்தபோதிலும் அந்த சிங்கங்கள் 3 ஆடுகளை கொன்றுவிட்டது. 
 
அங்கிருந்த பாவ்ஷின் நாய், விடாமல் குறைத்தது. இதனைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு வந்தனர். பாவ்ஷ் சிங்கத்தால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள் ஒன்று கூடி சிங்கத்தை அங்கிருந்து விரட்டினர்.
இதனையடுத்து படுகாயமடைந்த பாவ்ஷை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் துரிதமாக செயல்பட்டு எஜமானரையும், மீதமுள்ள ஆட்டையும் சிங்கத்திடம் இருந்து உயிரோடு மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு தின்பண்டங்களை வழங்கி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்