8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறைதண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன், 31 மார்ச் 2022 (19:38 IST)
ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என ஆந்திர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை கடைபிடிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை என ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதை ஏற்று சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்த ஆந்திர உயர்நீதிமன்றம், ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க உத்தரவு பிறப்பித்தது.