டிவி சேனல்கள் மற்றும் எப்.எம்.ரேடியோக்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
ஊடகங்களுக்கான விதிமுறைகளை மீறியதாக 73 டிவி சேனல்கள், 23 எப்.எம்.ரேடியோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் 892 தனியார் செயற்கைகோள் தொலைக்காட்சி செனல்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. 42 தனியார் எப்.எம்.ரேடியோ மற்றும் 196 சமுதாய வானொலி நிலையங்கள் மத்திய அரசால் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.
 
இந்நிலையில் ஊடகங்களின் விதிமுறைகளை மீறியதாக 73 டிவி சேனல்கள், 24 எப்.எம்.ரேடியோ சேனல்கள் மற்றும் 9 வார-மாத இதழ்களுக்கு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து அச்சு ஊடகங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பி.ஆர்.பி 1897 சட்டத்துக்கு மாற்றாக பி.ஆர்.பி.பி என்ற புதிய மசோதாவை கொண்டு வருவதற்கான முயற்சிகளை துவங்கிவிட்டதாகவும் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்