தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதிக்க அரசு பலவகையில் உதவி வருகின்றது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.