7 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளி, 23 மார்ச் 2012 (21:15 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 விழுக்காடாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து அகவிலைப்படி 58 விழுக்காட்டிலிருந்து, 65 விழுக்காடாக உயருகிறது.

மேலும் 2012 ஜனவரி முதல் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 7500 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 60 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்