நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசும் தண்ணீரை திறந்துவிட்டது. அதேநேரம், காவிரி நீரை திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்ய்ப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வருகிற 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.