பாரசிட்டமால் உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரமற்றவை - வெளியான அதிர்ச்சி தகவல்.!

Senthil Velan

வியாழன், 26 செப்டம்பர் 2024 (16:29 IST)
உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், அஜீரண கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் 53 மாத்திரைகள் தரமற்றவை என மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.   
 
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளை சிடிஎஸ்சிஓ எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும். 

இந்நிலையில், 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,   விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாரசிடமால் மாத்திரைகள், நீரிழிவு மாத்திரையான கிளிமிபிரைடு, ரத்த அழுத்த மாத்திரையான டெல்மிசார்டன் போன்ற மக்கள் அதிகம் வாங்கும் மாத்திரைகள், தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.  
 
சத்து மாத்திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஷெல்கால் மாத்திரையும் தோல்வியடைந்திருக்கிறது. இந்த மருந்துகளை ஹெடெரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரடரிஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.


ALSO READ: 'விசாரணையை சந்திக்க தயார்' - முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..! சித்தராமையா திட்டவட்டம்.!!
 
இதுகுறித்து அந்த மருந்து நிறுவனங்கள் அளித்துள்ள விளக்கத்தில், சோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல என்றும் அவை போலி மருந்துகள் என்றும் தெரிவித்துள்ளன.  இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருந்து நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்