ஹரியானா தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தென் கொரியாவின் சியோல் தேசிய பல்கலைகழகம் மற்றும் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியுடன் இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 4 பேரின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட, 50 வயதுடைய 2 ஆண் எலும்புக்கூடுகள், 5 அடி 4 அங்குலம் கொண்ட ஒரு பெண், மற்றும் ஒரு 10 வயது குழந்தை உட்பட இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் டி.என்.ஏ சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த 4 எலும்புக்கூடுகள் தவிர்த்து உணவு தானியங்கள், வளையல்கள், பொம்மைகள், சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் கவண் எறிய பயன்படும் பந்துகள் உட்பட புலிச்சின்னம் பொறித்த இலச்சினையும் கிடைத்துள்ளது.