பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டாலும், இதனை பலரும் வரவேற்று வருகின்றனர். ஆனால் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்தும் வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, என்னை பார்த்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என ஏன் தடை செய்தீர்கள் என கேட்கிறார்கள். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன் உங்கள் ஆட்சியில் ஏன் 25 பைசா நாணயத்தை தடை செய்தீர்கள்.
25 பைசா நாணயத்தை தடை செய்த போது அதனை யாரும் கங்கை ஆற்றில் போடவில்லை. ஆனால் தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் கங்கை ஆற்றில் போடப்படுகின்றன என்றார். மேலும் இந்த நடவடிக்கை அப்பாவிகளுக்கு ஒருபோதும் சிரமத்தை கொடுக்காது. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.