இந்தியாவில் சமீக காலங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர், கர்ப்பிணி, போன்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பர். சில சமயம் நோயாளிகள் இறக்க நேரிடும். அப்போதுஉரிய சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறி உறவினர்கள் மருத்துவரைத் தாக்குவதும், அடித்து உதைப்பதுமான சம்பவங்கள் அரங்கேறியது.
இந்நிலையில் தற்போது பார்லி கூட்டத் தொடர் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர்கள், செவிலியர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.