இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தொழிலாளர்களாக வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருகிறது. இதில், நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில், அந்நாட்டு நிறுவனங்கள் ஏமாற்றும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
குவைத் நாட்டில் கராபி நேஷனல் என்ற தனியார் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்களாகியும் சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை, பேச்சுவார்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அங்குள்ள தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல், அவர்கள் அனைவரும் தத்தளித்து வருகின்றனர்.