5 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...?

செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (21:34 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இது குறித்து ஆராய்ந்த ஆண்டனி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, கட்சியை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது

இதனையடுத்து சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று கூடியது.

இக்கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர்களாக உள்ள குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷித், வயலார் ரவி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நாராயணசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெவிக்கின்றன.

இவர்கள் தங்களது பதவியை ராஜினமா செய்து விட்டு கட்சிப்பணியில் இறங்க திட்டமிட்டிருப்பதாகவும், இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாராயணசாமி தெரிவிக்கும் போது, கட்சி தான் முக்கியம் ஆதலால், சோனியா காந்தி எந்த பதவி கொடுத்தாலும் ஏற்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்