5 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா கமிட்டி அறிவிப்பு

புதன், 3 பிப்ரவரி 2010 (16:13 IST)
ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களை ஒருங்கிணைத்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக ஆராய 5 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் தெலுங்கானா கமிட்டி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித் தெலுங்கானா உருவாக்குவது குறித்து அம்மாநிலத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் தெலுங்கானா கமிட்டி ஆலோசனை நடத்தும் என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணா தவிர தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரன்பிர் சிங், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அபுசலி ஷாரிஃப், டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் ரவீந்திர கௌர், முன்னாள் உள்துறை செயலர் வினோத் கே. துக்கால் ஆகியோர் தெலுங்கானா கமிட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்