கர்நாடகாவில் 350 பேர் கைது

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (16:15 IST)
கர்நாடகா மாநிலத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட 350 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று கலவரம் வன்முறையாக வெடித்தது. வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.
 
தமிழ் கடைகள், வங்கிகள், உணவங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தமிழர்களும் தாக்கப்பட்டனர். பணிமனையில் நின்ற 50 பேருந்துகளை தீவைத்து எரித்தனர்.
 
நேற்று மாண்டியா பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. இதையடுத்து மாலை 5 மணிக்கு பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
அதைதொடர்ந்து வன்முறை குறைய தொடங்கியது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. வன்முறை நடந்த வீடியோ காட்சிகளை கொண்டு, வன்முறையில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்