ஒரே வாரத்தில் 35 குழந்தைகள் மரணம்: என்ன நடக்கிறது கட்டக் அரசு மருத்துவமனையில்?

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (11:58 IST)
ஒடிஷா அரசு நடத்தும் சர்தார் வல்லபாய் பட்டேல் குழந்தைகள் நல முதுகலை பட்டப்படிப்பு இன்ஸ்ட்யூட்டில் 7  நாட்களில் 35 குழந்தைகள் இறந்துள்ளனர். ஒடிஷா அரசு இன்று மருத்துவ வாரியத்தின் குறைந்தது 7 மருத்துவர்களையாவது அனுப்பி அந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 5 மரணங்கள் அந்த மருத்துவமனையில் இன்று பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

அடுத்த உத்தரவு வரும் வரை மருத்துவ வாரியத்தின் மருத்துவர்கள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்வார்கள் ன்று மத்திய பிரிவு வருவாய் கோட்ட ஆணையாளர் பிகாஷ் மொஹபற்ரா குழந்தை மருத்துவமனையில் ஒரு கூட்டத்திற்கு  பிறகு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், ஒரு தொழில்நுட்ப குழு உட்பட வல்லுனர்கள், மருத்துவ கல்லூரி வாரியம் மற்றும்  எய்ம்ஸ், பூபனேஸ்வர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 48 மருத்துவர்கள் என ஒதுக்கப்பட்ட சிசு பவன் பல ஆண்டுகளாக 20 டாக்டர்கள் பணியில் இயங்கி வருகிறது,

கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை என அழைக்கப்படும் சிசு பவனில் தினசரி 300 க்கும்  மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். 50 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம்  நடைபெற்ற மருத்துவ புறக்கணிப்பு மற்றும் திடீர் எழுச்சிகள் போன்றவைகள் இந்த தொடர் மரணங்களுக்கு காரணமா என  பல்வேறு கோணங்களில் அம்மாநில அரசு யேசித்து வருகிறது.

மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி இயக்ககம் (DMET) தலைமையில் ஒரு தொழில்நுட்ப குழு தனித்தனியாக சமீபத்திய மரண வழக்குகள் ஒவ்வொன்றாக சரிபார்த்த வருகிறது என்றாலும் கூட, மற்ற சிகிச்சை அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. இரண்டு நபர்கள் சிகிச்சை அலட்சியம் என்று குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்தனர்,

வெப்துனியாவைப் படிக்கவும்