இந்த நிலையில், இன்று காலை 3 பேர் எண்ணெய் சேமிப்புக் கிடங்கை சுத்தம் செய்ய சென்றனர். அதில் ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற மேலும் 2 பேரும் தொட்டிக்குள் விழுந்தனர். மூன்று பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராடி ஒருவரை உயிருடன் மீட்டனர். மேலும் 2 பேரை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.