26/11 குற்றவாளி கசாப் பாதுகாப்புக்கு ரூ.16 கோடி செலவு

செவ்வாய், 22 நவம்பர் 2011 (13:18 IST)
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பின் பாதுகாப்புக்காக இதுவரை ரூ.16 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 180 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின்போது அதிரடிப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் கசாப் தவிர அனைத்து தீவிரவாதிகளும் பலியாகினர்.

பிடிபட்ட கசாப்புக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றமும் இத்தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கசாப்பின் பாதுகாப்புக்காக மகாராஷ்ட்ரா அரசு இதுவரை ரூ.16 கோடி செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்