கான்.... போயே போச்சே... தீயில்: சல்மான் குறித்த பைல் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு அதிரடி பதில்

வெள்ளி, 29 மே 2015 (01:48 IST)
நடிகர் சல்மான் கானின் கார் மோதி இறந்த வழக்கு தொடர்பான பைல்கள் தீயில் எறிந்து நாசம் அடைந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 2002ம் ஆண்டு  செப்டம்பர் 28 ம் தேதி அன்று, நடிகர் சல்மான் கான் மது போதையில் தனது காரை மிகவேகமாக ஓட்டிச் சென்றதில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் மீது ஏறிஇறங்கியது. இதில், ஒருவர் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
 
இது குறித்து, மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கின் இறுதியில் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்தது. ஆனால், கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசிடம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் மன்சூர் தர்வேஷ் என்பவர், நடிகர் சல்மான் கான் கார் மோதி, ஒருவர் இறந்த வழக்கு தொடர்பான பைல்களை தர வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்தார்.
 
இதற்கு பதில் அளித்த மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிரா மாநிலைத் தலைமைச் செயலகமான மந்திராலயாவில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், நடிகர் சல்மான் கான் தொடர்பான பைல்கள் எல்லாம் எரிந்து நாசமாகப்போய்விட்டது என தகவல் தெரிவித்துள்ளது.
 
ஆஹா..என்ன அற்புதமான பதில். 

வெப்துனியாவைப் படிக்கவும்