200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன்...பெற்றோர் அதிர்ச்சி...

வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:52 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் புனே என்ற பகுதியில் 200 அடி ஆழ்குழாய் கிணறு இருந்துள்ளது. இதில் 6 வயது சிறுவன் விழுந்து விட்டான்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவுனர் 16 மணி நேரப் போராட்டத்துக்கு பின் சிறுவனை உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி பண்டிட் பில் என்ற சிறுவன் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருக்கும் போது ,அருகில் இருந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் தெரியாமல் விழுந்துவிட்டதாக தெரிகிறது. அப்போது சிறுவனின் பெற்றோர் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.
 
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து ஆழ்குழாய் கிணற்றில் 10 அடியில், சிறுவன்  சிக்கி இருப்பதாக தெரிந்துகொண்டு, சிறுவனை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்