அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறிய வெளிநாட்டினரை கண்டுபிடித்து அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. இந்த பதிவேடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையே சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் இடம் பெறவில்லை என்பது ஐநாவுக்கே அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 20 பேர்களின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவே விடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கார்கில் போரின்போது பணியாற்றிய இந்த 20 ராணுவ வீரர்களும் பார்பெடா மாவட்டத்தில் உள்ள சருகாரித் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்களின் பெயர்கள் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயரும் இந்த பட்டியலில் இல்லை என்ற செய்தி இந்த பட்டியலையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது