மதுரை அருகே விளாங்குடி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா, ஆம்லெட் ஆகியவற்றை ஓசியில் தர மறுத்த கடை ஊழியரை 2 காவல் துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி வீடியோ கேமிராவில் பதிவாகி உள்ளது.
மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் இவர் விளாங்குடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலில் 2 காவல் துறையினர் பரோட்டா, ஆம்லெட் ஆகியவற்றை பார்சல் வாங்கிக்கொண்டு, பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் பணம் கேட்ட கடை ஊழியர் கார்த்திகேயனை காவல் துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த ஊழியரை கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் அடித்துள்ளனர். இதுதொடர்பாக சோமசுந்தரம், காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார்யாதவுக்கும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பினார்.
இதையடுத்து, காவல்துறை ஆணையர் தீவிர விசாரணை நடத்தி, நடந்த சம்பவத்தை ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிருந்தன வீடியோ காட்சியை பார்த்து, ஏட்டு அர்ஜுன், மந்தைசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தார்