2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா? உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இ‌ன்று ‌தீர்ப்பு

வியாழன், 2 பிப்ரவரி 2012 (09:06 IST)
2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் வழ‌க்‌கி‌ல் ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌ப.‌சித‌ம்பர‌த்தை சே‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌‌ணியசுவா‌மி மனு ‌‌மீது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌க்க உ‌ள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு அக்டோபர் 10 மற்றும் மார்ச் 17-ந்தேதிகளில் வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நடைபெற்றது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரை கொண்ட அம‌ர்வு இ‌ன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிக‌ளி‌ன் ஒருமனதான தீர்ப்பினை நீதிபதி ஜி.எஸ். சிங்வி இ‌ன்று அறிவிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்